சென்னை தமிழகபாஜகவினர் மீண்டும் ஊடக விவாதங்களில் பங்கேற்க உள்ளதாக அக்கட்சித் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ஊடகங்களில் தினசரி தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் அரசியல் தொடர்பாக விவாதம் நடத்தப்படுகிறது. இவற்றில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்று தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர். ஒரு சில சமயம் இந்த வாதங்கள் எல்லை மீறி ஒருவருக்கொருவர் மரியாதைக்குறைவான வார்த்தைகளால் பேசுவதும் அரங்கேறியிருக்கிறது. மேலும் விவாதங்களின்போது, சில கட்சிகள் தங்கள் தரப்பு கருத்தைத் தெரிவிக்க […]
