சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வரும் 25ந்தேதி காங்கிரஸ் தலைமையில் கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார். நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பான மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி ஜனவரி 7 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுபோல மற்ற மாநிலங்களிலும் […]
