சென்னை நடிகர் ரஜினிகாந்த்துக்கு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதுவரை பிற நாடுகளுடன் இணைந்து உலகக் கோப்பை தொடர்களை நடத்திய இந்தியா முதல் முறையாகத் தனியாக நடத்துகிறது. மும்பை, ஆமதாபாத், சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் மைதானங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முடிவடைந்துள்ளது. […]
