பெண் குழந்தைகள் எப்போதுமே கடவுளுக்கு ஒப்பானவர்கள். தந்தைமார்களுக்கு பெண் குழந்தை என்றாலே எப்போதும் ஒரு தனி பாசம் இருக்கும். தன்னுடைய மகளுக்கென நாள் முழுவதும் அயராது உழைப்பார்கள். கேட்கின்ற பொருளை இல்லை என்று கூறாமல் மகளுக்காக பார்த்து பார்த்து செய்யக்கூடியவர்கள் தந்தை. தந்தையர் தினம், அன்னையர் தினம் போன்றவை அன்னை மற்றும் தந்தையின் அன்பை போற்றும் நாளாக இருப்பது போல், மகள் என்ற புனித உறவின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு நாளாக குடும்பத்தினருடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
பல நாடுகளில் பெண் குழந்தைகளை சுமையாக தான் பார்க்கிறார்கள். ஆண் குழந்தைக்கு கொடுக்கப்படும் சம உரிமை பெண் குழந்தைக்கு கிடைப்பதில்லை. ஆண் – பெண் சம உரிமையை நிலை நாட்டும் வகையில், சில நாடுகளின் அரசுகள் மகள்கள் தினத்தை முன்னெடுத்துள்ளன.
உலக மகள்கள் தினம் அன்று வீட்டில் இருக்கக்கூடிய பெற்றோர்கள் தங்களுடைய மகளுக்கு பரிசு பொருள்களை வழங்கி நாளினை சிறப்பிக்கிறார்கள்.
அன்றைய நாளில் மகளுடன் வெளியில் சென்று மகள் கேட்கும் பொருள்களை வாங்கி அவர்களை சந்தோசப்படுத்துகிறார்கள்.
பெண் குழந்தை என்பது ஒரு குடும்பத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும் இன்றைய சமூகத்தில் ஆண் குழந்தையை காட்டிலும் பெண் குழந்தைகளை சற்று தாழ்வாகத்தான பார்க்கிறார்கள். மகள்கள் தினம் என்பது ஒவ்வொரு குடும்பத்தினர் மகள்களுக்காக கொண்டாடும் ஒரு குடும்ப விழாவாக மாறி வருகிறது.
மேலும் இந்த நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதால் அன்று விடுமுறை தினம் என்பது கூடுதல் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. நாள் முழுவதும் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக மகள்கள் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
மகள்கள் தினத்திற்கான சிறந்த வாசகம்:
1.நமது இதயத்தை முடிவில்லாத அன்பால் நிரப்ப வானத்தில் இருந்து வந்த தேவதை – மகள்
2. தந்தையின் வயது அதிகமாகும் போது அவருக்கு மிகவும் பிடித்தமானவர் மகளைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.
3. ஒரு மகள் என்பவர் கடந்த காலத்தின் ஒரு மகிழ்ச்சியான ஞாபகம், நிகழ்காலத்தின் ஒரு மகிழ்ச்சியான தருணம், வருங்காலத்தில் நிஜம் மற்றும் நம்பிக்கை.
4. மகள் என்பவர் கௌரவப்படுத்த வேண்டியவர். நீங்கள் உங்கள் மகளை கௌரவப்படுத்துங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் மகள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக அளவில் 28-ம் தேதியும் இது கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இன்று மகள்கள் தினமாகும். இந்த ஆண்டு மட்டும் செப்டம்பர் மாதத்தில் 4 ஞாயிற்றுக் கிழமைகள் வருகின்றன. 4-வது ஞாயிற்றுக் கிழமையைக் கணக்கில் கொண்டு மகள்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
பெண் குழந்தைகளை கௌரவிக்கும் வகையில் இன்று மகள்கள் தினம் உலகின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.
ஆண்களின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் கடந்து செல்பவர்கள்தான் பெண்கள். அம்மாவாக, காதலியாக, தோழியாக, மனைவியாக, உறவினராக அன்பைப் பொழிகிறார்கள். இத்தனை பெண்களையும் தாண்டி, ஒருவனுக்கு மகிழ்ச்சியையும், வாழ்க்கை மீதான பிடிப்பையும் தருவது மகள் என்ற உறவு மட்டும்தான்….
பெற்றோர் எவ்வளவுதான் செல்லமாக வளர்த்தாலும், பெண் என்பவள் வேறொரு வீட்டில் வாழப்போகிறவளாகவே பார்க்கப்படுகிறாள். ஆனாலும், புகுந்தவீட்டிற்கு அவள் சென்றபின் பிறந்துவளர்ந்த வீடு வெறிச்சோடிப் போய் விடுகிறது…
சகோதர சகோதரிகளுடன் ஆடிப் பாடிய பால்ய பருவம், பூப்படைந்ததும் மாறி விடுகிறது. புகுந்த வீட்டிற்குச் சென்றபின் புதுப்புது உறவுகள் என பெண்ணுக்கு புதுப் பிறவியாகவே அமைகிறது.
மகள் பிறந்த போது அவள் வடிவில் ஒரு தாயும் பிறக்கிறாள் என்பது பழமொழி. கருத்தரிக்கும் பேறு- இயற்கை பெண்களுக்குத்தான் தந்துள்ளது. பத்துமாதம் சுமந்து குழந்தையைப் பிரசவிக்கும்போது அவள் மறுபிறவி எடுக்கிறாள்..
அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆளுமை செலுத்திவரும் இந்தக் காலத்தில், பெண்சிசுக்கொலை, பாலியல் வன்கொடுமை, குழந்தைத் திருமணம் போன்ற கொடுமைகளும் நடைபெறத்தான் செய்கின்றன. பெண்களுக்கு எதிரான தீங்குகள் ஒழியட்டும், பெண்களின் பெருமையை இவ்வுலகம் என்றென்றும் போற்றட்டும்.
ஆண்களின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் கடந்து செல்பவர்கள்தான் பெண்கள். அம்மாவாக, காதலியாக, தோழியாக, மனைவியாக, உறவினராக அன்பைப் பொழிகிறார்கள். இத்தனை பெண்களையும் தாண்டி, ஒருவனுக்கு மகிழ்ச்சியையும், வாழ்க்கை மீதான பிடிப்பையும் தருவது மகள் என்ற உறவு மட்டும்தான்….
பெற்றோர் எவ்வளவுதான் செல்லமாக வளர்த்தாலும், பெண் என்பவள் வேறொரு வீட்டில் வாழப்போகிறவளாகவே பார்க்கப்படுகிறாள். ஆனாலும், புகுந்தவீட்டிற்கு அவள் சென்றபின் பிறந்துவளர்ந்த வீடு வெறிச்சோடிப் போய் விடுகிறது…
சகோதர சகோதரிகளுடன் ஆடிப் பாடிய பால்ய பருவம், பூப்படைந்ததும் மாறி விடுகிறது. புகுந்த வீட்டிற்குச் சென்றபின் புதுப்புது உறவுகள் என பெண்ணுக்கு புதுப் பிறவியாகவே அமைகிறது.
மகள் பிறந்த போது அவள் வடிவில் ஒரு தாயும் பிறக்கிறாள் என்பது பழமொழி. கருத்தரிக்கும் பேறு- இயற்கை பெண்களுக்குத்தான் தந்துள்ளது. பத்துமாதம் சுமந்து குழந்தையைப் பிரசவிக்கும்போது அவள் மறுபிறவி எடுக்கிறாள்..
அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆளுமை செலுத்திவரும் இந்தக் காலத்தில், பெண்சிசுக்கொலை, பாலியல் வன்கொடுமை, குழந்தைத் திருமணம் போன்ற கொடுமைகளும் நடைபெறத்தான் செய்கின்றன. பெண்களுக்கு எதிரான தீங்குகள் ஒழியட்டும், பெண்களின் பெருமையை இவ்வுலகம் என்றென்றும் போற்றட்டும்..
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்