வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியும் உள்ளார். அவர் அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த நபருடன் தமிழில் உரையாடிய வீடியோ வைரலாகியுள்ளது.
அமெரிக்காவில் 2024ம் ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் உட்பட பலரும் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
அதேபோல், அக்கட்சி சார்பில் இந்திய வம்சாவளிகளான விவேக் ராமசாமி, 38, நிக்கி ஹாலே உள்ளிட்டோரும் போட்டியிடுவதற்காக, ஆதரவு திரட்டி வருகின்றனர்.
குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் குறித்து சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பில், டிரம்ப் முதலிடத்தையும், விவேக் ராமசாமி 2வது இடத்தையும் பிடித்தார். அக்கட்சியின் அதிபர் வேட்பாளர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார்.
இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியுடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஒருவர் உரையாடினார். அந்த உரையாடலை விவேக் ராமசாமி, தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது. அதில் அவர்கள் பேசியதாவது:
தமிழ் நபர்: உங்களை அமெரிக்க அதிபராக பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக வாழ்த்துகள்.
விவேக் ராமசாமி: நன்றி. உங்கள் விருப்பத்தை வரவேற்கிறேன்.
தமிழ் நபர்: என் குடும்பத்தினர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
விவேக் ராமசாமி: ஓ.. தமிழகத்தில் எங்கே?
தமிழ் நபர்: வேலூரில்..
விவேக் ராமசாமி: (உடனடியாக தமிழில் உரையாடினார்) வேலூரிலா? நானும் தமிழ் பேசுவேன்.
தமிழ் நபர்: உங்களுக்கு தமிழ் தெரியுமா? நீங்கள் நிச்சயம் தலைவர் ஆகணும்.
விவேக் ராமசாமி: எனக்கு பாலக்காடு தமிழ் தெரியும். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement