“பூனை என்று நினைத்து கருஞ்சிறுத்தையை வளர்த்த பெண்'' இறுதியில் என்ன நடந்தது?!

ரஷ்யாவில் வசித்து வரும் இளம்பெண் விக்டோரியா. இவர் சாலையோரத்தில் கைவிடப்பட்டு பரிதாபகரமாகக் கிடந்த சிறிய கறுப்பு நிற பூனையைக் கண்டெடுத்துள்ளார். அதனை தனது வீட்டிற்குக் கொண்டு சென்று, அதற்கு லூனா எனப் பெயரிட்டு வளர்த்து வந்துள்ளார்.

கறுஞ்சிறுத்தையுடன் விக்டோரியா

தொடர்ச்சியாக அதனைப் பராமரித்து வந்த நிலையில், தான் வளர்த்து வந்தது பூனையல்ல; கருஞ்சிறுத்தை எனத் தெரிய வந்துள்ளது. அந்த சிறுத்தையைச் சாலையில் இருந்து மீட்டது முதல் அது வளரும் படிநிலைகளை அழகாக வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ச்சியாக கருஞ்சிறுத்தையின் நடவடிக்கைகள் மற்றும் அதன் உண்ணும் முறை, அதோடு நட்பாகப் பழகும் வீடியோக்களை வெளியிட்டுப் பிரபலமடைந்துள்ளார்.

முற்றிலும் வளர்ந்து பார்ப்பவர்களுக்கு திகிலளிக்க கூடிய நிலையில் கருஞ்சிறுத்தை தோற்றமளித்தாலும், அதோடு கூலாக அமர்ந்து அவர் எடுக்கும் வீடியோக்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கருஞ்சிறுத்தையோடு செல்லப்பிராணியாக நாயையும் வளர்த்து வருகிறார். கருஞ்சிறுத்தையும் நாயும் தான் விளையாட்டு பார்ட்னர்கள். இவர்கள் விளையாடும் வீடியோக்களுமே வைரல் தான்.  

நாயுடன்

தான் வளர்த்தது பூனையல்ல கருஞ்சிறுத்தை என்று தெரிந்த பின்னரும் அதனை வளர்த்து வருகிறார் விக்டோரியா. 

ஒருபுறம் இவரது வீடியோக்கள் வைரலாகி பெரும் கவனத்தைப் பெற்றாலும், பலரும் கருஞ்சிறுத்தையை வீட்டுக்குள் வைத்து வளர்ப்பது ஆபத்தானது எனவும் சட்டத்திற்கு புறம்பானது எனவும் எச்சரிக்கை கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.