சென்னை: அக்டோபர் 1ம் தேதி அதிரடியாக தலைவர் 170 படத்தின் டீம் அறிவிப்புகளை வெளியிட ஆரம்பித்த லைகா நிறுவனம் நேற்று வரை அப்டேட் மழை பொழிந்து வந்த நிலையில், இன்று திருவனந்தபுரத்தில் தலைவர் 170 படப்பிடிப்பை தொடங்கி உள்ளது. சென்னையில் இருந்து கேரளாவுக்கு நேற்றே விமானம் மூலம் கிளம்பிய சூப்பர்ஸ்டார் தலைவர் 170 படம் நல்ல கருத்துள்ள
