ஆசிய விளையாட்டுப் போட்டி: இன்று இந்தியாவுக்கு மூன்று தங்கம், மொத்தம் 84 பதக்கங்கள்!

Hangzhou Asian Games 2023 Updates: ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 12வது நாளான இன்று, ஆண்களுக்கான வில்வித்தை போட்டியில் ஓஜாஸ் பிரவீன், அபிஷேக் வர்மா, பிரதமேஷ் சமாதான் ஆகிய மூவரும் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கத்தை வென்று தந்துள்ளனர். அதேபோல ஸ்குவாஷ், கலப்பு அணியில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல் மற்றும் ஹரிந்தர் பால் சிங் தங்கம் வென்றுள்ளனர். இந்தியாவுக்கு இது இரண்டாவது தங்கமாகும். அதற்கு முன்னதாக ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த் சுவாமி, பிரனீத் கவுர் ஆகிய மூவரும் வில்வித்தையின் கலப்பு சுற்றில் தங்கப் பதக்கம் வென்றனர்.

மறுபுறம், பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் மலேசியாவின் லி ஜி ஜியாவை வீழ்த்தி ஹெச்.எஸ்.பிரணாய் இறுதி போட்டியில் நுழைந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 தொடரில் பாட்மிண்டனில் அரையிறுதியில் தோல்வியடையும் வீரர்கள் இருவருக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படுகிறது.

அதேநேரம், ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான ஹாக்கி அரையிறுதிப் போட்டி இந்தியா-சீனா இடையே நடந்து வருகிறது. சீனா 1-0 என முன்னிலையில் உள்ளது.

GOLD MEDAL No. 21 for India

Archery: Trio of Abhishek, Ojas & Prathmesh beat powerhouse South Korean team 235-230 in Final of Men’s Compound Team event.

Medal count: 84

@worldarchery #AGwithIAS #IndiaAtAsianGames #AsianGames2022 pic.twitter.com/KWN3Iu8ekv

— India_AllSports (@India_AllSports) October 5, 2023

19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இந்தியா 83 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 20 தங்கம் அடங்கும். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 தங்கம் உட்பட 70 பதக்கங்களை வென்றது  தான் அதிகமான எண்ணிக்கையாக இருந்தது. இந்தமுறை அனைத்து சாதனைகளையும் முறியடித்து இந்தியா அதிக பதக்கங்களை குவித்து வருகிறது.

Squash: Harinder Pal Singh Sandhu’s record at Asian Games: 3 Gold | 2 Bronze

Team: 2022
Mixed Doubles: 2022
Team: 2014
Team: 2018
Team: 2010

Proud of you @sandhu_harinder #AGwithIAS #IndiaAtAsianGames #AsianGames2022 pic.twitter.com/rgnueJYGBI

— India_AllSports (@India_AllSports) October 5, 2023

தங்கக் கோப்பையை வென்ற இந்திய வீரர்கள்

வில்வித்தை: மகளிர் கூட்டு அணி, பைனலில் சீன தைபே அணியை வீழ்த்தியது. காம்பவுண்ட் ரவுண்டு வில்வித்தையில், ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த் சுவாமி, பிரனீத் கவுர் மூவரும் இந்தியாவுக்கு தங்கம் வென்றுள்ளனர். இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை 230-219 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. முன்னதாக, இந்திய அணி அரையிறுதியில் இந்தோனேசியா அணியை 233-229 என்ற புள்ளிக்கணக்கிலும், காலிறுதியில் ஹாங்காங்கை 231-220 என்ற புள்ளிக்கணக்கிலும் வீழ்த்தியது.

ஸ்குவாஷ்: கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல்- ஹரிந்தர் பால் சிங் தங்கம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சிங் ஜோடி 2-0 என்ற கணக்கில் மலேசிய ஜோடியான முகமது ஷபிக், அய்ஃபா அஸ்மான் ஜோடியை தோற்கடித்தது.

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை பட்டியல்

வரிசை
நாடு
தங்கம்
வெள்ளி
வெண்கலம்
மொத்தம்
1
சீனா
174
95
52
321
2
ஜப்பான்
37
51
59
147
3
தென் கொரியா
33
45
71
149
4
இந்தியா
21
31
32
84
5
உஸ்பெகிஸ்தான்
16
16
22
54

இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் நிலவரம்

மல்யுத்தம்: பூஜா கெலாட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவின் தங்கம் அல்லது வெள்ளி நம்பிக்கையை உயிர்ப்பித்துள்ளார். 50 கிலோ எடைப்பிரிவில் பூஜா கெலாட் அரையிறுதியில் மங்கோலியாவின் சோக்ட்-ஓச்சிர் நமுண்ட்சே ஜோடியை தோற்கடித்தார். 

பேட்மிண்டன்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஹெச்.எஸ்.பிரணாய் 21-16, 21-23 மற்றும் 22-20 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லீ ஜீ ஜியாவை தோற்கடித்தார். முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த மலேசியா, இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெற்று மீண்டது. மூன்றாவது ஆட்டத்தில் பிரணாய் வெற்றி பெற்றார். முன்னதாக, பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பிவி சிந்து 16-21, 12-21 என்ற கணக்கில் சீன வீராங்கனை ஹி பிங்சாவிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

தடகளம்: இந்தியாவின் மான் சிங் மாரத்தானில் 2:16:59 நேரத்தில் 8வது இடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில் பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் பெலியப்பா அப்பச்சங்கடா போ 2:20:52 நேரத்துடன் 12வது இடத்தைப் பிடித்தார்.

வில்வித்தை: ஓஜாஸ் பிரவீன், அபிஷேக் வர்மா, பிரதமேஷ் சமாதான் மூவரும் மெஸ் காம்பவுண்ட் அரையிறுதியில் சீனா தைபே அணியை 224-235 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளனர். அந்த அணி இறுதிப் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொள்கிறது.

கபடி: ஏ பிரிவு ஆட்டத்தில் ஆடவர் அணி 50-27 என்ற புள்ளி கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.