வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: திறன் மேம்பாட்டு திட்ட ஊழலில் கைதாகியுள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கோர்ட் காவலை அக்.19-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, 73, திறன் மேம்பாட்டு கழகத்தில், 317 கோடி ரூபாய் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில், அம்மாநில சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடுகோர்ட் காவல் நிறைவடைந்ததை அடுத்து இன்று (05 ம் தேதி) மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அக்.19-ம் தேதிவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி உச்சநீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிருத்தா போஸ், எம்.திரிவேதி அமர்வு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்தது. விசாரணை அக்டோபர் 9ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement