வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூருவில் பேருந்து நிழற்குடையை திருடிச்சென்ற சம்பவம் நடந்ததுள்ளது. போலீசார் நிழற்குடையை தேடி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் கன்னிங்ஹாம் சாலை எப்போதும் வாகன போக்குவரத்துடன் பிஸியாக இருக்கும் இங்கு பஸ் ஸ்டாப் உள்ளது. இந்த ஸ்டாப்பில் ரூ. 10 லட்சம் செலவில் ஸ்டெயின்லஸ் ஸ்டீல்களால் ஆன பயணிகள் அமரும் இருக்கையுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்பட்டுஇருந்தது. பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழகம் நிழற்குடையை பராமரித்து வந்தது.
இந்நிலையில் கடந்த செப் 30ம் தேதியன்று நிழற்குடை திடீரென மாயமானது. நிழற்குடை இருந்த தடம் தெரியாமல் மர்ம நபர்கள் கொத்தாக பெயர்த்து எடுத்துச்சென்றதாக தெரிய வந்தது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழக துணை தலைவர் ரவி ரெட்டி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி., பதிவுகளை வைத்து நிழற்குடைய திருடிசென்றவர்களையும், நிழற்குடையையும் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement