ஸ்மார்ட் டிவிக்களில் நாளுக்கு நாள் புதுப்புது அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இவையனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கவும், தியேட்டரில் இருக்கும்போது சவுண்ட் எபெக்டில் கிடைக்கும் அந்த திரில்லிங் அனுபவத்தை கொடுக்கவும் இப்போது ஸ்மார்ட் டிவிக்கள் முயற்சிக்கின்றன. அதற்கேற்ப ஒன்பிளஸ், எல்ஜி, பிராவியா, சாம்சங்க், ரெட்மீ மற்றும் ஏசர் உள்ளிட்ட பிரபல பிராண்டுகள் புதுப்புது ஸ்மார்ட் டிவிக்களையும், ஏற்கனவே இருக்கும் மாடல்களில் ஏஐ, வாய்ஸ் அசிடென்ட், கேமிங், ப்ளூடூத் உள்ளிட்ட அப்டேட்டுகளையும் செய்து வெளியிட்டு வருகின்றன. ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல எனும் வகையில், ஒன்றில் இருக்கும் பிளஸ் இன்னொன்றில் மைனஸாக இருக்கும்.
ஆனால், உங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப நீங்கள் தீர்மானித்து வாங்க வேண்டும். விரைவில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை, அமேசான் கிரேட் அதிரடி ஆஃபர் விற்பனையில் ஸ்மார்ட் டிவிக்களுக்கு பெரும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த நேரத்தில் நீங்கள் ஸ்மார்ட் டிவி வாங்க திட்டமிட்டால் சிறந்த தள்ளுபடிகளுடன் தொலைக்காட்சிகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். அந்தவகையில் மார்க்கெட்டில் இப்போது பிரபலமாக இருக்கும் ஸ்மார்ட் டிவிக்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். 32 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கள் எல்லாம் பட்ஜெட் விலையில் 5 ஆயிரம் ரூபாயில் இருந்தே கிடைக்கின்றன. கம்பெனி என்றால் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியிருக்கும். பிரபல ஸ்மார்ட் டிவிக்களின் ஸ்கிரீன் அளவுகள் அதிகரிக்கும்போது விலையும் 10 ஆயிரத்தில் இருந்து லட்சம் ரூபாய் வரை செல்லும்.