டொரன்டோ :
இந்தியா – கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பணிபுரியும் கனடா துாதரக ஊழியர்களை, அங்கிருந்து அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில், கடந்த ஜூனில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இதனால், இந்தியா — கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் பணிபுரியும் கனடா துாதரக ஊழியர்களை, வரும் 10க்குள் திரும்பப் பெற வேண்டும் என, அந்நாட்டுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி, இந்தியாவில், 62 ஆக உள்ள கனடா துாதரக ஊழியர்களின் எண்ணிக்கையை, 41 ஆக குறைக்க உத்தரவிடப்பட்ட தாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் பணிபுரியும் கனடா துாதரக ஊழியர்களை, அங்கிருந்து அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள், மலேஷியா அல்லது சிங்கப்பூரில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள இந்திய துாதரகம் அருகே, சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது, நம் நாட்டின் தேசியக் கொடி தரையில் இருந்தது. இதைப் பார்த்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் சத்யம் சுரானா, தேசியக் கொடியை உடனடியாக கையில் எடுத்து பாதுகாத்தார்.
இது குறித்து மாணவர் சத்யம் சுரானா கூறுகையில், ”இந்தியா வல்லரசாக மாறிக் கொண்டிருக்கிறது. அதன் வளர்ச்சியை திசை திருப்பவே இது போன்ற போராட்டங்கள் நடக்கின்றன,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement