சென்னை: லியோ ட்ரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து படத்தின் ப்ரொமோஷன் வேலைகள் வேகமெடுத்துள்ளன. விரைவில் துபாயில் பிரம்மாண்டமான முறையில் லியோ ப்ரொமோஷன் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், லியோ படப்பிடிப்பின் போது, விஜய் – லோகேஷ் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. அதுபற்றியும் லியோ திரைப்படம் LCU-இல் உருவாகியுள்ளதா என்பது குறித்தும் தயாரிப்பாளர் லலித் குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.
