ஜெருசலேம்: இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் செயல்படும் ஆயுதக்குழுக்கள் ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தின. முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்களை வீசியதாக அந்த குழுக்கள் தெரிவித்துள்ளன. இதனால், ஆத்திரமடைந்துள்ள இஸ்ரேல் போருக்கு தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ராக்கெட் தாக்குதலில், இஸ்ரேலைச் சேர்ந்த பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தார். 100 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பாலஸ்தீனத்தில் செயல்படும் ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக்குழுவினர் காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர். ‛ ஆபரேசன் அல் அக்சா பிளட்’ என்ற பெயரில் தாக்குதலை துவக்கி உள்ளதாக அறிவித்துள்ள அந்த அமைப்புகள், முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்களை ஏவியதாகவும் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் அனைத்து ஆக்கிரமிப்புகளுக்கு முடிவு கட்டுவோம் எனவும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த ராக்கெட் தாக்குதலில், இஸ்ரேலைச் சேர்ந்த பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தார். 100 பேர் காயம் அடைந்துள்ளனர். ஏராளமான கட்டடங்கள், கார்கள், பஸ்கள் தீப்பிடித்து எரிந்தன. அதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். ராக்கெட் வீச்சால், பல கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் ராக்கெட் விழும் சத்தம் கேட்டது. மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஜெருசலேம் நகர் முழுவதும் சைரன் ஒலித்தபடி உள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதனையடுத்து, போராக்கு தயாராக உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயற்சி செய்ததாக குற்றம்சாட்டி உள்ள இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், பாராகிளைடர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சாலைகளில் சென்ற கார்களும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.
இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் பாலஸ்தீன குழுக்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலால் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்பதால், அச்சம் அடைந்துள்ள பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement