கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்குப் புது ரூல்ஸ்! மிஸ் பண்ணாதீங்க…

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தொடர்பான விதிகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. இந்த கார்டுகள் தொடர்பான புதிய ஒழுங்குமுறை விதிகள் அக்டோபர் 1, 2023 முதல் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது குறித்து பலரும் தெரிந்துகொள்ளாமலே இருக்கிறார்கள்! 

ஒரு கடைக்கு சென்று நீங்கள் உங்களது கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்கிறீர்கள் எனில், உங்களுக்கு கார்டு வழங்கிய வங்கியிடம் நீங்கள் பணத்தைக் கேட்கிறீர்கள். ஆனால், இது முதலில் கிரெடிட் கார்டு நெட்வொர்க் வழியாகச் சென்று வங்கியை அடைகிறது. அதன்பிறகு கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை அங்கீகரிக்கும் வேலையை வங்கிகள் கையாள்கின்றன.

கிரெடிட் கார்டு

எளிதாக சொல்ல வேண்டுமெனில், கடை உரிமையாளரின் வங்கிக்கும், கார்டு வழங்கிய வங்கிக்கும் இடையே தகவல்களை பரிமாற்றும் இணைப்பு பாலமாக கிரெடிட் கார்டு நெட்வொர்க்குகள் செயல்படுகிறது.   

பொதுவாக, பெரும்பாலான வங்கிகள் Visa, Mastercard, RuPay போன்ற கார்டு நெட்வொர்க்குகளுடன் பிரத்யேக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே வாடிக்கையாளர்களுக்கு கார்டுகள் வழங்கப்படுகின்றன. 

இந்தியாவில் தற்போது ஐந்து கார்டு நெட்வொர்க்குகள் இருக்கிறது. அவை, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்கிங் கார்ப்பரேஷன், டைனர்ஸ் கிளப் இன்டர்நேஷனல் லிமிடெட், மாஸ்டர்கார்டு ஆசியா/பசிபிக், விசா, ரூபே போன்றவைதான் அந்த ஐந்து கார்டு நெட்வொர்க்குகள்.

இந்த நிலையில், டெபிட் கார்டு, ப்ரீபெய்டு மற்றும் கிரெடிட் கார்டுகளில் முக்கியமான சில விதிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள் என்னென்ன என்று பார்ப்போம்.  

* கார்டு வழங்கும் வங்கிகள் பல கார்டு நெட்வொர்க்குடன் சேர்த்து கார்டை வழங்க வேண்டும்.

* தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான கார்டு நெட்வொர்க்கை (card networks) தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு

*இதனை அவர்கள் கார்டு வாங்கும்போதும் செய்யலாம் அல்லது வாங்கியபின்பும் செய்யலாம்.

* புதியதாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் தாண்டி, ஏற்கெனவே பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களும் கார்டு நெட்வொர்க்கைத் தேர்ந்தெடுக்கலாம்.

இந்தப் புதிய விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்திருப்பதன் மூலம் ஒருவர் தனக்கு சிறப்பான சேவையைத் தரும் நெட்வொர்க்கைத் தேர்வு செய்யும் நிலை உருவாகி இருக்கிறது. இது ஆரோக்கியமான மாற்றம் என்றே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் நுகர்வோர்கள் கருதுகிறார்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.