வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கடந்த சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் உரையேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது அறிவித்த திட்டங்களின் நிலை குறித்தும், அதனை நிறைவேற்றுவது குறித்தும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
சுதந்திர தின உரையில், ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்கள் வீடு வாங்குவதற்கு செலுத்தக்கூடிய வகையில் கடன் வழங்குவது குறித்த அறிவிப்பை மோடி வெளியிட்டார். இதனை அமல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடந்தது.
அதேபோல், வீடுகளுக்கு சூரிய மின்சக்தி மின்சாரம் கிடைப்பது குறித்து மோடி பேசியிருந்தார். இதனை அமல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், இந்த திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து எடுத்துரைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement