பண்டிகை காலங்களையொட்டி பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கியுள்ளது. பிரபலமான மொபைல் பிராண்டுகளான ஆப்பிள், சாம்சங், விவோ, மோட்டோரோலா மற்றும் பல பெரிய பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கு பல்வேறு விலை வரம்புகளில் சூப்பரான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் ப்ரீமியம் உறுப்பினர்களுக்கான அணுகல் இன்று முதல் கிடைக்கும். அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் ஒருநாள் முன்னதாக பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் இருக்கும் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் டீல்களையும் முன்கூட்டியே பெற முடியும்.
அக்டோபர் 15 ஆம் தேதி வரை பிளிப்கார்ட் பிக்பில்லியன் டேஸ் விற்பனை இருக்கும். அதுவரை நீங்கள் விரும்பும் பொருட்களை சிறந்த தள்ளுபடியில் வாங்கலாம். ஸ்மார்ட்போன் வாங்குபவராக இருந்தால் சிறந்த டீல்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு யூசர்களுக்கு வங்கிகளுக்கு ஏற்ப சலுகைகளும் தள்ளுபடிகளும் கொடுக்கப்படுகிறது. இந்த விற்பனையில் 10 அயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் மொபைல்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
Infinix Hot 30 5G
Infinix Hot 30 5G இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மொபைல் MediaTek Dimensity 6020 SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 128GB சேமிப்பகத்துடன் 4GB மற்றும் 8GB RAM வகைகளில் கிடைக்கிறது. 6.78-இன்ச் முழு-HD+ டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 50-மெகாபிக்சல் முதன்மை சென்சார் தலைமையிலான இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. போனின் 4ஜிபி ரேம் மாறுபாடு ரூ. 12,499. ஆனால் இது தள்ளுபடி விலையில் 11,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இப்போது வாங்க ரூ. 11,499 (எம்ஆர்பி ரூ. 12,499)