திருச்சி அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்கள் கோரிக்கையில் நியாயம் உள்ளதாக தாம் நினைப்பதாகத் தெரிவித்துள்ளார். நேற்று திருச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு உரையாற்றினார். அமைச்சர் அன்பில் மகேஷ் தனது உரையில், ”அனைத்து தரப்பினரும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது எனப் பாராட்டி வருகின்றனர். இந்த வேளையில் ஆசிரியர்கள் போராட்ட நிகழ்வு நடைபெற்றது. நான் இந்த கூட்டத்தை இதற்கு விளக்கம் அளிக்கப் பயன்படுத்திக்கொள்கிறேன். தமிழகஅரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்த 53 […]
