காபூல்: ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது. 12 கிராமங்களில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரமட்டமாகின.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் மாகாணத்தை மையமாக வைத்து பூகம்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரிக்டரில் 5.5, 4.7, 6.3, 5.9 மற்றும் 4.6 என்ற அளவுகளில் பூகம்பத்திற்கு பிந்தைய நில அதிர்வுகள் உணரப்பட்டது. இதனால் 12 கிராமங்களில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரமட்டமாகின.
இடிபாடுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, பேரிடர் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது அப்துல்லா ஜான் கூறியிருப்பதாவது: ஹெராட் மாகாணத்தில் உள்ள ஜெண்டா ஜான் மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்கள் பலத்த சேதங்களை சந்தித்துள்ளன என்றார்.
சாலையில் தஞ்சம்
அப்பகுதி மக்கள் கூறுகையில், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் காலியாக உள்ளன. மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. நானும் எனது குடும்பத்தினரும் எங்கள் வீட்டிற்குள் வெளியே சாலையில் தஞ்சமடைந்துள்ளோம். நிலநடுக்கத்தால் அத்தியாவசிய பொருட்கள் சரியாக கிடைப்பதில்லை என கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement