காபூல்: ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 320 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் நேற்று பிற்பகல் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3 ஆக பதிவாகி இருந்தது. ஹெராட் என்ற பகுதியில் வடமேற்கில் 40 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொன்டிருந்தது.
Source Link