இஸ்ரேலில் சிக்கிய இந்தியர்கள் 27 பேர் பத்திரமாக மீட்பு | 27 Indians trapped in Israel rescued safely

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கெய்ரோ : இஸ்ரேல் உள்நாட்டு போரில் சிக்கி தவித்த இந்தியர்கள் 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு எகிப்து வந்தடைந்னர்.

கடந்த இரண்டு நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுக்கள் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் இருந்து 27 பேர் இஸ்ரேல் சென்றிருந்தனர். பாலஸ்தீனம் பகுதியில் சிக்கி தவித்த 27 இந்தியர்கள் பத்திரமாக எகிப்து வந்தடைந்தனர். என மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா சமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார். தெரிவித்து உள்ளார்.

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் இந்தியாவின் தூதரகம் முயற்சியால் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.