திருச்செந்தூர் தனியாரிடம் இருந்து கோடிக்கணக்கான கோவில் சொத்துக்களை திமுக அரசு மீட்டுள்ளதாகக் கனிமொழி கூறி உள்ளார். இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் திமுக எம்.பி., கனிமொழி கலந்துகொண்டு பேசினார். கனிமொழி தனது உரையில் “திராவிட இயக்கங்கள் கோவில்களின் நிர்வாகத்தை தி கையகப்படுத்தி பெரும்பான்மை மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் பெரும்பான்மை மக்கள் வழிபடும் கோவில் நிர்வாகத்தில் நடக்கும் தவறுகளைக் களைவதற்காகவே கோவில் நிர்வாகத்தை அரசு எடுத்து நடத்தி […]
