91 -வது இந்திய விமானப்படை தினம் – பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி,

நமது இந்திய விமானப்படை ஆனது அக்டோபர் 8-ம் தேதி 1932 ஆம் ஆண்டில் பிரிடிஷ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாக கொண்டாடப்படுகிறது. நாட்டின் வான் எல்லைகளை பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து விமானப்படை பாதுகாத்து வருகின்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு விமானப்படை தினமானது உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ்-ல் கொண்டாடப்பட்டது. இந்திய விமானப்படையின் தளபதி வி.ஆர்.சவுதாரி தலைமை தாங்கினார்.

இந்நிலையில் விமானப்படைக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். அவர் தனது எக்ஸ் சமூகவலை தளத்தில், விமானப்படை தினத்தில் விமானப்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன். இந்திய விமானப்படையின் வீரம் மற்றும் அர்ப்பணிப்பால் இந்தியா பெருமைகொள்கிறது. அவர்களின் சிறந்த சேவைகள் மற்றும் தியாகங்கள் இந்திய வான் எல்லை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கின்றன, என தனது வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.