சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் கூறிய நிலையில், முன்னாள் அமைச்சர் அதிமுக செல்லூர் ராஜூக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், அணைகள் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளதாக கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. தமிழ்நாடு குளிர்க்கால சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. முதலாவதாக மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகின்றனர். முதலமைச்சராக […]
