அதிர்ஷ்டமாக கருதுகிறேன் – நுபுர் சனோன்

பிரபல பாலிவுட் நடிகை கிர்த்தி சனோனின் சகோதரி நுபுர் சனோன். பாடகியான இவர், ரவிதேஜாவின் 'டைகர் நாகேஸ்வர ராவ்' படம் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அபிஷேக் அகர்வால் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அனுபம் கெர், ரேணு தேசாய், முரளி சர்மா, ஹரீஷ் பெரேடி, ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இந்த படம் வருகிற 20ம் தேதி வெளிவருகிறது. இதேநாளில் கிர்த்தி சனோன் நடித்துள்ள பாலிவுட் படமான 'கண்பத்' படமும் வெளிவருகிறது.

இதுகுறித்து நுபுர் சனூன் கூறும்போது “ரவிதேஜாவுடன் நடித்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அவர் தனித்துவமான நடிகர் என்பதை அறிவேன். நடிப்பு என்று வந்துவிட்டால் பரபரப்பாகி விடுவார். அக்ஷய்குமாருடன் 'பில்ஹால் 2' என்ற ஆல்பத்தில் நடித்தபோது, அடுத்து என்ன படம் பண்ணுகிறீர்கள்? என்று அவர் கேட்டார். நான் தெலுங்கில் ரவி என்பவருடன் நடிக்கிறேன் என்று சொன்னேன். அதற்கு அவர் ஆச்சயர்யமாக ரவிதேஜாவுடன் நடிக்கிறாயா? அவரை பற்றி உனக்குத் தெரியுமா? நீ எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி என்பதை அவருடன் நடிக்கும்போது தெரியும் என்றார்.

அவர் சொன்னதைப் படப்பிடிப்பில் உணர்ந்தேன். முதல் பட நடிகை என்று பார்க்காமல் என்னை கவனித்துக் கொண்டார். இந்தப்படம் வரும் 20ம் தேதி வெளியாகிறது. என் சகோதரி கீர்த்தி சனோன் நடித்துள்ள 'கணபத்' படமும் அதே நாளில் வெளியாகிறது. இரண்டு படமும் வெற்றிபெற வேண்டும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.