Honda SP125 Sports Edition Features: பண்டிகை காலம் ஆரம்பிக்க உள்ளதால், அதை மனதில் வைத்து, இந்தியா ஹோண்டா நிறுவனம் தனது புகழ்பெற்ற பைக் ஹோண்டா எஸ்பி 125 பைக்கின் புதிய ஸ்போர்ட்ஸ் எடிஷனை (Honda SP 125 Sports Edition) அறிமுகப்படுத்தி உள்ளது. கவர்ந்திழுக்கும் கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.90,567 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பைக்கின் அறிமுகத்துடன், அங்கீகரிக்கப்பட்ட டீலர் மற்றும் இணையதளம் மூலம் தனது அதிகாரப்பூர்வ முன்பதிவையும் தொடங்கியுள்ளது. ஒரு நல்ல இருசக்கரா வாகனத்தை வாங்க நீங்கள் திட்டமிட்டு இருந்தால், இந்த பைக் உங்களுக்கு பொருத்தமாக இருக்கலாம். அதற்கு முன்பு ஹோண்டா எம்பி 125 பைக்கின் அம்சங்களை குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்
ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் நல்ல செயல்திறன்
ஹோண்டா நிறுவனம் புதிய ஸ்போர்ட்ஸ் எடிஷன் ஹோண்டா எஸ்பி 125 பைக்கில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. இது வழக்கமான மாடலில் இருந்து வேறுபட்டது. இதில் என்ஜின் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றாலும். புதிய ஸ்போர்ட்ஸ் எடிஷன் அறிமுகம் குறித்து பேசிய ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, “தொடக்கத்தில் இருந்தே, ஹோண்டா எஸ்பி125 அதன் மேம்பட்ட அம்சங்கள், ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்காக பிரீமியம் கம்யூட்டர் மோட்டார் சைக்கிள் பிரிவில் புகழ்பெற்றது. அதன் புதிய ஸ்போர்ட்ஸ் எடிஷன் வாடிக்கையாளர்களை மேலும் கவரும் என்று நம்புகிறோம் எனக் கூறியுள்ளார்.
ஹோண்டா எஸ்பி 125 பைக்கின் அம்சங்கள்
புதிய ஸ்போர்ட்ஸ் எடிஷன் ஹோண்டா எஸ்பி 125 பைக்கில் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லாம்ப், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பைவ் ஸ்பீடு கியர் பாக்ஸ், வேகம், எரிபொருள் அளவு போன்ற அடிப்படை தகவல்களை வழங்குகிறது. இது தவிர பைக்கின் எஞ்சின் மெக்கானிசத்தில் எந்த மாற்றமும் இல்லை. முன்பு போலவே, இந்த பைக்கில் 123.94 சிசி திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் பிஜிஎம்-எஃப்ஐ எஞ்சின் உள்ளது, இது 7,500 ஆர்பிஎம்மில் 10.7 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 10.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
ஹோண்டா எஸ்பி 125 பைக் வாங்கினால் 10 வருட உத்தரவாதம்
ஹோண்டா நிறுவனத்தின் மற்ற பைக்குகளைப் போலவே, ஹோண்டா இந்த மோட்டார் சைக்கிளுக்கும் 7 வருட நிலையான உத்தரவாதத்தை வழங்குகிறது. இது தவிர, 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது. இதற்காக வாடிக்கையாளர்கள் கூடுதல் பணம் செலவழிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, இந்த பைக்குடன் வாடிக்கையாளர்கள் 10 வருட உத்தரவாதத்தைப் பெறலாம்.
இந்த வண்ணங்களில் ஹோண்டா எஸ்பி 125 பைக் கிடைக்கும்
இந்த புதிய ஸ்போர்ட்ஸ் எடிஷன் ஹோண்டா எஸ்பி 125 பைக் டீசன்ட் ப்ளூ மெட்டாலிக் மற்றும் ஹெவி கிரே மெட்டாலிக் பெயிண்ட் வண்ணங்களில் கிடைக்கிறது.