Virat Kohli Celebration Viral Video: சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி சிறப்பாக பந்துவீசினாலும், பேட்டிங்கின் தொடக்கத்தில் பெரிதும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இஷான் கிஷன், ரோஹித், ஷ்ரேயாஸ் ஆகியோர் அடுத்தடுத்து டக்-அவுட்டாக விராட் கோலி, கே.எல். ராகுல் தான் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். குறிப்பாக, விராட் கோலி 85 ரன்களையும், கேஎல் ராகுல் 97 ரன்களையும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருதை கேஎல் ராகுல் வென்ரார். zeenews.india.com/tamil/sports/webstory/virat-kohli-is-the-king-of-odi-cricket-check-the-stats-here-467226
முதல் போட்டியிலேயே வெற்றியுடன் ஆரம்பித்த இந்திய அணி உற்சாகமாக காணப்படுகிறது. இந்திய அணி அடுத்து அக். 11ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியையும், 14ஆம் தேதி பாகிஸ்தான் அணியையும் எதிர்கொள்ள உள்ளது. தொடர்ந்து, தன்னமைப்பிக்கை உடன் விளையாட இந்தியாவுக்கு இந்த வெற்றி கைக்கொடுக்கும்.
அந்த வகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியில் விராட் கோலியின் பங்கை ஒதுக்கவே இயலாது. பேட்டிங்கில் மட்டுமின்றி நேற்றைய பீல்டிங்கிலும் அவர் மாஸ் காட்டினார். பும்ரா பந்துவீச்சில் மார்ஷ் கொடுத்த கடினமான கேட்சை முதல் ஸ்லிப்பில் நின்ற கோலி, கண்ணிமைக்கும் நேரத்தில் தாவிப்பிடித்தது இந்தியாவின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. மேலும் நேற்றைய போட்டியில் நல்ல பீல்டிங் செய்து சில கேட்ச்களையும் அவர் பிடித்தார்.
இந்நிலையில், இந்திய அணி நிர்வாகம் சார்பில் இந்திய வீரர்களை பாராட்டும் வகையில் சிறு பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்திய வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த வீடியோ கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில், கேட்ச் பிடித்தது மட்டுமில்லாமல் தொடர்ந்து சிறப்பாக பீல்டிங் செய்து, சரியான இடத்தில் சரியான வீரர்களை பீல்டிங் செய்ய நிறுத்த உதவிய விராட் கோலிக்கு இந்த பதக்கம் என இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திலீப் அறிவித்தார்.
#ViratKohli
Best Fielder Medal goes to King Kohli.#WorldCup2023 #KingKohli
Video Source (@BCCI) pic.twitter.com/EniNHs8Sc7
— Mr.Naruto (@MrNarutoHokage) October 9, 2023
மேலும், கோலியிடம் கையில் பதக்கத்தை கொடுத்த திலீப்பை தனது கழுத்தில் அணியுமாறு விராட் கோலி குதூகலமாக கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, அவர் பதக்கத்தை வாயில் வைத்து கொண்டாடி, மிக மிக உற்சாகமாக நடனமாடியபடி கொண்டாடினார். அவரை சக வீரர்களும் உற்சாகப்படுத்துவதை வீடியோவில் காணலாம். அந்த வகையில், இந்திய அணியின் ஆரோக்கியமான டிரஸ்ஸிங் ரூமை காண முடிகிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.