முசாபர்நகர்: பீஹாரில் விபத்தில் இறந்தவர் உடலை அம்மாநில போலீசார் கால்வாயில் வீசி எறியும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பீஹார் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் பெகூலி என்ற இடத்தில் கால்வாய்க்கு மேல் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பாலத்தில் நேற்று (அக்.08) வாகன விபத்து நடந்துள்ளது. இதில் ஒரு ஆண் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலையில் இறந்து கிடந்த ஆண் சடலத்தை தூக்கி சென்று பாலத்திற்கு அடியில் கால்வாயில் வீசி எறிந்தனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
விபத்தில் இறந்தவர் உடலை மீட்பு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்காமல் , ஈவு இரக்கமின்றி மனிதாபிமானமில்லாமல் கால்வாயில் வீசியதாக மூன்று போலீசார் மீது கடும் கண்டனம் எழுந்தது.
இதையடுத்து மூன்று போலீசாரையும் மாவட்ட எஸ்.பி., சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement