வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டெல்அவிவ் : ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தற்போது காசா பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசா மலைக்குன்று பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 5,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி, இஸ்ரேலுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தனர். இத்தாக்குதலில் இதுவரை 1,100 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலின் தென் பகுதியில் நிலம், கடல் மற்றும் வான் வழியாக ஊடுருவி வந்த நிலையில் லெபானிலிருந்து செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாதிகள், ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்புடன் இணைந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவி வருவதாகவும் அவர்களை இஸ்ரேல் ராணுவம் எதிர் தாக்குதல் நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே காசா பகுதி இஸ்ரேல் வசம் வந்த போதிலும், அங்கு உணவு , மின்சாரம் மற்றும் குடிநீர், விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement