
மீண்டும் ஜி.வி. பிரகாஷ் ஜோடியாகும் திவ்ய பாரதி
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி. வி. பிரகாஷ் விரைவில் தனது 25வது படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு 'கிங்ஸ்டன்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. காதலிக்க யாருமில்லை படத்தை இயக்கிய கமல் பிரகாஷ் இந்த படத்தை இயக்குகிறார். பேண்டஸி ஜானரில் உருவாகும் இந்த படத்தை ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர் .
தற்போது இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் கதாநாயகியாக நடிக்க நடிகை திவ்ய பாரதி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக பேச்சுலர் படத்தில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவிற்கு திவ்ய பாரதி அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.