74 வது இராணுவ ஆண்டு நிறைவுடன் வீழ்ந்த போர் வீரர்களுக்கு நினைவேந்தல்

இலங்கை இராணுவம் தனது 74 வருட நிறைவு விழாவை முன்னிட்டு உயிர்நீத்த போர் வீரர்களின் விலைமதிப்பற்ற தியாகங்களை நினைவு கூறும் வகையில் வெள்ளிக்கிழமை (6) பிற்பகல் பத்தரமுல்லை போர் வீரர் நினைவுத் தூபியில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இராணுவத்தின் தற்போதைய தளபதி என்ற வகையில் 74 வது இராணுவ ஆண்டு நிறைவு (ஒக்டோபர் 10) மற்றும் இராணுவ தினத்தை முன்னிட்டு இடம் பெற்ற சம்பிரதாய நினைவேந்தல் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.

14 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து பயங்கரவாதம் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதன் பின்னர், ஒவ்வொரு வருடமும் அதன் ஆண்டு நிறைவை முன்னிட்டு, உயிரிழந்த போர்வீரர்களின் தியாகங்களின் நினைவுகளை அழியாத வகையில் நினைவு கூருவதற்கான நன்றியுணர்வின் முக்கிய அடையாளமான இந்த அஞ்சலி செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடதக்கதாகும். நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் மீட்டெடுப்பதற்காக தங்கள் விலைமதிப்பற்ற உயிரை தியாகம் செய்த ஆயிரக்கணக்கான போர் வீரர்களின் ஈடு இணையற்ற வீரத்திற்கு இராணுவம் செலுத்தும் கௌரவமான மரியாதை இதுவாகும்.

இந் நிகழ்வானது இவ்வாண்டு கொண்டாட்டங்களின் தொடர்ச்சியான மத நிகழ்வுகளுக்கு அடுத்து ஒக்டோபர் 10 இராணுவ தினத்திற்கு சில நாட்களுக்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டது.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வருகையின் பின்னர் , தேசிய கீதம் மற்றும் இராணுவக் கீதம் ஒலிக்கப்பட்டதை தொடர்ந்து உயிர்நீத்த போர் வீரர்களை கௌரவிக்கும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மே 2009 க்கு முன்னர் மூன்று தசாப்த கால எல்ரீரீஈ பயங்கரவாதத்திலிருந்து மனிதபிமான நடவடிக்ககையில் இலங்கையின் ஆயுதப் படைகள் எவ்வாறு தமது இணையற்ற வீரம் மற்றும் துணிச்சலுடன் இலங்கைக்கு சமாதானத்தை எவ்வாறு பெற்று கொடுத்தார்கள் என்பதை நேர்த்தியாக உடையணிந்த சிப்பாய் ஒருவரால் பகிரங்கமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்றைய பிரதம அதிதி, பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் மக்களுக்காக தமது பொன்னான உயிரை தியாகம் செய்த போர் வீரர்களின் நினைவு தூபியில் மலர் அஞ்சலி செலுத்தினார். இது உண்மையிலேயே ஒரு கணம், துக்கம் மற்றும் நன்றியுணர்வு ஆகியவற்றால் நிரப்பப்பட்டதுடன், நினைவு தூபி உறுதியாகவும் தோன்றியது. தேசத்தின் பெரும் வீரர்களின் நினைவை உயிருள்ளவர்கள் பார்க்கும்படி நினைவு தூபி அழியாமல் நிலைநிறுத்தி அமைந்துள்ளது.

இராணுவத் தளபதியினால் மலர்வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தியதையடுத்து, இராணுவத்தின் அனைத்து படையினர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அதிகாரவாணையற்ற அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள், உட்பட அனைத்து நிலையினரால் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

அன்று மாலை நேரத்தில் அப்பகுதியில் இராணுவத்தின் இசைக்கலைஞர்களினால் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் மெல்லிசை இசைக்கப்பட்டது. இறுதியில் இராணுவத்தின் இறுதி பியுகல் ஊதலுடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி, நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம், உபகரண பணிப்பாளர் நாயகம், பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள், பிரதான பதவி நிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் தலைமுறை தலைமுறையாக நினைவுகூரப்படுபவர்களின் கடந்த கால நினைவுகளுக்கு வணக்கம் செலுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.