காபூல்: சில தினங்களுக்கு முன், ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,400 ஐ தாண்டி உள்ளது. இன்று(அக்.,11) மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில், 2021 ஆகஸ்ட் முதல், தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகின்றனர். அந்நாட்டின் நான்காவது பெரிய நகரமாகவும், அதிக மக்கள் தொகை உடைய நகரமாகவும் ஹெராத் விளங்குகிறது. இந்நிலையில், இந்த நகரின் வடமேற்கே கடந்த 7ம் தேதி அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இவை, முறையே, 6.3; 5.9 மற்றும் 5.5 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவாகின. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,400 ஐ தாண்டி உள்ளது. மேலும், 1,300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கடந்த 20 ஆண்டுகளில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்று.

இந்நிலையில் இன்று(அக்.,11) மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது. இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் எனக் கூறப்படுகிறது. இதனால் உயிர் சேதங்கள், பொருள் சேதங்கள் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement