ஜெருசலேம்: இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவ 24 மணி நேர அவசரகால உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியர்கள் அமைதியுடனும் விழிப்புடனும் இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையிலான போர் 5வது நாளை எட்டியுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இஸ்ரேலில் 1,200 பேரும், காசாவில் 900 பேரும் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் பயங்கரவாதிகள் 1,500 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போர் நிலவரம் குறித்து பேசினார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசும், வெளியுறவு துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவ 24 மணி நேர அவசரகால உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் 972-35226748, 972-543278392 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிகளிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்தியர்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்கள் 0592-916-418 மற்றும் 970592916418 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அதேபோல், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிகளிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement