வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : காவிரியில், தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள், காவிரியில் 16 ஆயிரம் கன அடி நீர் திறக்க கோரினர்.
ஆனால், இதனை ஏற்க மறுத்த காவிரி ஒழுங்காற்றுக்குழு, அக்.,16 முதல் 30 வரை 15 நாட்களுக்கு காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட பரிந்துரை செய்தது.
காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்ற கர்நாடகாவின் கருத்தை குழு நிராகரித்துவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement