தஞ்சாவூர் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்து இன்று டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்துக்கு உரிய காவிரிநீரைத் திறக்காத கர்நாடக அரசைக் கண்டித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கடையடைப்பு போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை […]
