
புது புராஜெக்டில் பாவ்னி ரெட்டி
சின்னத்திரை நடிகையான பாவ்னி ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கம்பேக் கொடுத்தார். அமீர்-பாவ்னி காதல் விவகாரம் எப்போதும் இருவரையும் சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கில் வைத்திருக்கிறது. பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சிக்கு பின் அஜித் நடித்த துணிவு படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். அதன்பின் பாவ்னி ரெட்டி எந்தவொரு படத்திலோ, சீரியலிலோ கமிட்டாகவில்லை. இந்நிலையில், தற்போது மேக்கப் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு பாவ்னி புகைப்படம் வெளியிட்டு, புதிய புராஜெக்டில் கமிட்டாகி இருப்பதாக அறிவித்திருக்கிறார். இதனால், உற்சாகமடைந்த ரசிகர்கள் பாவ்னி சினிமாவில் நடிக்கிறாரா? சீரியலில் நடிக்கிறாரா? என கேட்டு வருகின்றனர்.