வேலையின்மையால் திண்டாடும் சீன இளைஞர்கள்| Chinese youth suffering from unemployment

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பீஜிங்: சீனாவில் அதிகரித்துள்ள வேலையின்மையால் அந்நாட்டு இளைஞர்கள் திண்டாடுகின்றனர்.

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. தற்போது 21.3 சதவீதம் இளைஞர்கள் அங்கு வேலை இல்லாமல் தவிப்பதாக நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. இது கொரோனா காலகட்டத்துக்கு முன்பு இருந்ததை விட இரண்டு மடங்குகள் அதிகம்.

இப்பிரச்னைக்கு அந்நாட்டு அரசாங்கத்தின் முரண்பாடான சில கொள்கைகளே முக்கிய காரணம் என அறிஞர்கள் கூறியுள்ளனர். அதில் ஒன்று கிராமப்புற இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு இல்லாதது. மற்றொன்று ஒரே குழந்தை திட்டம். இது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னரே அரசால் கைவிடப்பட்டாலும் அதன் தாக்கம் மக்களிடம் இன்னும் உள்ளது.

சீனாவில் ஏற்பட்டுள்ள வேலையில்லா திண்டாட்டம் உலகளாவிய வினியோக சங்கிலியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். மற்ற நாடுகளின் வெற்றிகரமான நடவடிக்கைகளில் இருந்து சீனா தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.