சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கொடுத்த அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து அவர் தன்னுடைய மகளின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலைவர்170 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் பூஜையுடன் துவங்கியுள்ளது.
