திருவனந்தபுரம், கேரளாவில் நேற்று எட்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இன்று ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நேற்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது.
இதனால், இந்த பகுதிகளில் 6 – 11 செ.மீ., வரை மழை பெய்தது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.
இதனால் இந்த மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து இன்றும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய ஏழு மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement