நாட்டின் முன்பள்ளிக் கல்வி, சாதாரண தர பாடசாலைக் கல்வி, தொழில் பயிற்சிக் கல்வி மற்றும் உயர் கல்வி எனும் நான்கு துறைகளையும் உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் காணப்படும் கல்வி முறைக்கிணங்க அப்பாடநெறி மற்றும் அதனுடன் இணைந்ததாக அபிவிருத்தி செய்து, எதிர்காலத்தில் நாட்டிற்கு கல்வி முறையை சர்வதேச தரத்திற்குக் கொண்டு செல்விருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்: நாட்டில் தற்போது இயங்கும் 19 கல்விக் கல்லூரிகள், 8 ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஆசிரியர் கல்விக்காக ஒதுக்கப்பட்ட கல்விப் பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்கவுள்ளதாகவும், அதன்போது கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு யாழ்ப்பாணப் பிராந்தியத்தின் மத்திய நிலையம் என்ற அந்தஸ்துக் கிடைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வட மாகாணத்திலுள்ள ஆசிரியர் பயிலுநர்களுக்கு அது சிறந்த வரப்பிரசாதமாகும் என வலியுறுத்தினார்.
2027ஆம் ஆண்டளவில் சகல ஆசிரியர்களும் பயிற்சியுடனான பட்டதாரி ஆசிரியர்களாக பாடசாலை வகுப்புகளுக்கு அனுப்புவதற்கு உத்தேசிப்பதாகத் தெரிவித்த அமைச்சர், யாழ்ப்பாண பிராந்தியத்திலிருந்து முறையான தொழில் பயிற்சிக்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதன் ஊடாக நாட்டிற்கு அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்பைப் பெறுவதற்கான சுயதொழிலில் ஈடுபடும் பழக்கத்தை அதிகரிப்பதனால் மேலும் மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்கான திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெளிவுபடுத்தினார்.