
லியோ வெற்றிக்காக திருப்பதியில் தரிசனம் செய்த லோகேஷ் கனகராஜ்
மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அக்டோபர் 19ம் தேதி ரிலீஸுக்காக காத்திருக்கும் லோகேஷ் கனகராஜ், கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். பல சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பணியாற்றிய தன்னுடைய சகாக்களான இயக்குனர் ரத்னகுமார் உள்ளிட்ட சிலருடன் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மலைப்பாதை வழியாக படியேறி சென்றுள்ளனர்.
ரத்னகுமார் கோவிந்தா கோவிந்தா என்று கூறியபடியே முன்செல்ல அவரை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மற்றவர்களும் அதே போல கூறிக்கொண்டு பின்தொடர்ந்து செல்லும். வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
லியோ படம் எந்தவித பிரச்சனைகளும் இன்றி நல்லபடியாக வெளியாக வேண்டும் என்பதற்காகவும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் நேர்த்திக்கடன் செலுத்த லோகேஷ் கனகராஜ் சென்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது.