சென்னை: அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அஜித் தனது 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்தத் தகவல் தீயாக பரவி வரும் நிலையில், அஜித்தின் ஏகே 64 பற்றிய அப்டேட்டும் வெளியாகியுள்ளது.
