காசா எல்லை அருகே, புறநகர் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த சண்டையில் குண்டுகள் வீசப்பட்டன. இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில், பயங்கரவாதிகள் 60 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் தெற்கு கடற்படை பிரிவின் துணை தளபதி முஹமது அபு அலி உட்பட, 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
அங்கு, பதுங்கு குழியில் சிறை வைக்கப்பட்டிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட, 250 பிணை கைதிகளை இஸ்ரேல் ராணுவம் பத்திரமாக மீட்டது. இந்த தகவலை அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினர் 13 பேர், இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களை மீட்க சிறப்பு விமானம்
250 பிணைக்கைதிகள் மீட்பு
இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையிலான போரில், 27 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு தங்கியுள்ள பிற அமெரிக்கர்களை மீட்க சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
250 பிணைக்கைதிகள் மீட்பு
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement