அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘Brunswick’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘Brunswick’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு (2023 ஒக்டோபர் 11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இவ்வாறாக, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Spearhead-Class Expeditionary Fast Transport வகையின் கப்பலான ‘Brunswick’ நூற்று மூன்று (103) மீட்டர் நீளமும், மொத்தம் இருபத்தி நான்கு (24) கடற்படையினரயும் கொண்டுள்ளது மற்றும் ANDREW H PERETTI (Captain ANDREW H PERETTI ) கப்பலின் கட்டளை அதிகாரியாக நடவடிக்கைகள் மேற்கொள்கிரார்.

மேலும், ‘Brunswick’ என்ற கப்பல் தீவில் தங்கியிருக்கும் போது, கப்பலில் வந்த கடற்படையினர் தீவின் முக்கிய இடங்களை மற்றும் பல பகுதிகளை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளதுடன் குறித்த கப்பல் 2023 அக்டோபர் 15, ஆம் திகதி தீவை விட்டு புறப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.