ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி இரண்டு வெற்றிகளுடன் வெகு சிறப்பாக தொடங்கியிருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி, மிக மோசமான இடத்தில் இருக்கிறது. கம்பீரமான அணியாக கிரிக்கெட் உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, இம்முறை பொட்டி பாம்பாக அடங்கி ஒடுங்கிப் போய் இருக்கிறது. அந்த அணியிடம் இருந்து வெளிப்படும் ஆக்ரோஷமான ஆட்டம் இரண்டு போட்டிகளிலும் ஒரு இடத்தில் கூட வெளிப்படவில்லை. இதனால், தோல்வியே பரிசாக கிடைத்திருக்கிறது.
முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி எதிர்கொண்டது. அப்போட்டியில் 134 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. அப்போதே ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு, பீல்டிங் என எல்லா துறையிலும் ஒரு சுணக்கம் இருப்பதை கிரிக்கெட் வல்லுநர்களும் ரசிகர்களும் சுட்டிக் காட்டியிருந்தனர். ஆக்ரோஷமாகவும், எதிரணி மீது ஆதிக்கம் செலுத்துவதையும் கடந்த ஒரு தசாப்தத்தில் மற்ற அணிகளுக்கே கற்றுக் கொடுத்த அணி என்றால் அது ஆஸ்திரேலியா தான். அந்த அணியின் இந்த அணுகுமுறையோடு தான் எல்லா ஐசிசி போட்டிகளிலும் களமிறங்கும்.
perking1816) October 12, 2023
அப்படியான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வது என்பதே பெரும் சவாலாக இருக்கும். ஆனால் இந்த உலக கோப்பையில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியில் அந்த ஆட்டத்தை பார்க்க முடியவில்லை. இந்திய அணியுடன் தோல்வி அடைந்தபிறகு வீரர்கள் அனைவரும் கைக்குலுக்கி கொண்டு வெளியேறும் சமயத்தில் சேப்பாக்கம் கேலரியில் இருந்த இந்திய அணியின் ரசிகர்கள் வெற்றியை செம உற்சாகமாக கொண்டாடி தீர்த்தனர். அப்போது அங்கிருந்த ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்களுக்கு முகம் வாடிப்போய் இருந்தது. ஒரு ஆஸ்திரேலிய ரசிகர் இந்திய ரசிகர்களின் கொண்டாட்டத்தைப் பார்த்து, அழுதே விட்டார். கண்ணீர் விட்டு அவர் அழும் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.
ider_prakash) October 13, 2023
இந்திய அணியிடம் தான் ஆஸ்திரேலிய அணி படுமோசமாக தோற்றது என்றால், அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணியிடமும் படு தோல்வியை சந்தித்து இருக்கிறது. இந்த இரு போட்டிகளிலும் அந்த அணியின் பேட்டிங் படு மோசமாக இருந்தது. ஒரு முறைகூட 200 ரன்களை தொடவில்லை. அடுத்த போட்டியிலாவது 5 முறை உலக கோப்பை சாம்பியன் தோல்வியில் இருந்து மீண்டு வருமா? என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.