திருவனந்தபுரம், திருவனந்தபுரம் அருகே, ஓடும் பஸ்சில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மலையாள ‘டிவி’ நகைச்சுவை நடிகர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம், கொல்லம் அருகே நிலமேல் பகுதியைச் சேர்ந்தவர் பினுகமால், 42; ஏராளமான டிவி நிகழ்ச்சிகளிலும், சினிமாவிலும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை திருவனந்தபுரத்தில் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், கேரள அரசு பஸ்சில் நிலமேலுக்கு சென்று கொண்டிருந்தார்.
திருவனந்தபுரம் அருகே வட்டப்பாறை என்ற இடத்தில் பஸ் சென்றபோது, அருகில் இருந்த பெண் பயணியிடம், பினு கமால் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
டிரைவர் பஸ்சை நிறுத்தியதும், பினுகமால் இறங்கி ஓடினார். அங்கிருந்தவர்கள் அவரை விரட்டி பிடித்து, வட்டப்பாறை போலீசில் ஒப்படைத்தனர். அவர் கைது செய்யப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement