கேரளாவின் அலுவா பகுதியை சேர்ந்த மாலவி மற்றும் அவரது மனைவி உட்பட 45 பேர் கொண்ட குழுவினர் இஸ்ரேலுக்கு புனித பயணம் மேற்கொண்டனர். கடந்த 7-ம் தேதி அவர்கள் இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் இவர்கள் காத்திருந்தபோதுதான் ஹமாஸ்
தாக்குதல் அறிவிப்பு வெளியிடப்பட்டு அவர்களது பயணம் நிறுத்தப்பட்டது.
பல கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்ற ராக்கெட் குண்டு தாக்குதலையும் இவர்களால் பார்க்க முடிந்தது. குண்டு சத்தத்தையும் கேட்க முடிந்தது. பீதியில் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தவர்கள் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு உதவியை நாடினர்.
இந்திய தூதரக அதிகாரிகள் இவர்கள் இருக்கும் ஓட்டலுக்கு வந்து மீட்டுச் சென்று தாபா எல்லை வழியாக எகிப்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து இவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளனர்.
இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சரியான நேரத்தில் தலையிட்டு நாடு திரும்ப உதவியாக கேரள குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.