இஸ்ரேல் தொடர் தாக்குதல்; ஐ.நா., கவலை| Israel – Hamas War: Israel Wants 1.1 Million Gazans To Move, UN Warns Of Devastating Outcome

காசா நகரம் மீது இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதலால் பலர் பாதித்துள்ளதாகவும், போரால் பொதுமக்கள் பாதிக்காதவாறு கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஐ.நா., எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா., மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது:

காசாநகர மக்கள் 10 லட்சம் பேர் மாற்று இடங்களை நோக்கி நகருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் இது போன்ற நகர்வு நடப்பது சாத்தியமல்ல. இன்னும் கால அவகாசம் கொடுக்க வேண்டும். அத்துடன் போரால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.

மேலும் ஐ.நா., அலுவலகம் மாற்று இடத்திற்கு செல்லுமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கையால் இஸ்ரேல் முழு அளவில் தரை வழி தாக்குதலை தொடங்கும் என அஞ்சப்படுகிறது. இது பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம் என ஐ.நா., கவலை தெரிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.