
நயன்தாரா நடத்திய கிளாமர் போட்டோ சூட்
ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி வெளியான ஜவான் படம் 1100 கோடி வசூல் செய்து சாதனை செய்து நயன்தாராவுக்கு பாலிவுட்டில் நல்லதொரு என்ட்ரியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதன் பிறகு ஜெயம் ரவியுடன் அவர் நடித்த இறைவன் படம் கடந்த மாதம் 28ம் தேதி திரைக்கு வந்தது. இந்த படங்களை தொடர்ந்து டெஸ்ட் மற்றும் தனது 75 வது படத்திலும் தற்போது நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஆரம்ப காலத்தில் பில்லா உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்த நயன்தாரா, ஒரு கட்டத்தில் கிளாமராக நடிப்பதை குறைத்திருந்தார். ஆனால் தற்போது பாலிவுட் என்ட்ரிக்கு பிறகு மீண்டும் அவர் கவர்ச்சி குயினாக மாறி இருக்கிறார். பிரபல மேகசின் ஒன்றுக்கு கிளாமர் போட்டோசூட் ஒன்று நடத்தியுள்ளார் நயன்தாரா. அது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.