வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கலிபோர்னியா: பயங்கரவாத அமைப்புகளுக்கு ‛எக்ஸ்’ தளத்தில்(டுவிட்டர்) தளத்தில் இடமில்லை எனக்கூறியுள்ள அந்த தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், ஹமாஸ் பயங்கரவாதிகள் தொடர்புடைய 100க்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்கி உள்ளார். இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக எக்ஸ் இணையதளத்தின் சிஇஓ லிண்டா யாகரினோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அனைத்து நேரங்களிலும் பொது மக்கள் கலந்துரையாட, சேவை செய்வதில் ‛எக்ஸ்’ இணையதளம் உறுதியாக உள்ளது. இந்த தளத்தில் சட்டவிரோத உள்ளடக்கத்தை சரி செய்யப்படுவது மிகவும் முக்கியம். பயங்கரவாத அமைப்புகள், வன்முறையை தூண்டுபவர்களுக்கு எக்ஸ் தளத்தில் இடமில்லை. அந்த அமைப்புகளின் கணக்குகள் உடனடியாக நீக்கப்படுகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement